Sunday, 15 June 2014

இந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்!


இந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்!



சவுதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சல்மான் அடுத்த மாதம் நமது இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அந்த பயணத்தில் இந்திய சவுதி உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும். மற்றும் பல கோடி டாலர்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்களும் இடப்படும் என்று நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இளவரசர் சல்மானோடு நடத்திய பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இந்த பேட்டியை பத்திரிக்கைகளுக்கு தந்தார் ப.சிதம்பரம்.

இளவரசர் சல்மான் ப.சிதம்பரத்தை சென்ற செவ்வாய் கிழமை வரவேற்று உபசரித்தார். இது பற்றி சிம்பரம் சொல்லும் போது 'மன்னர் அப்துல்லா 2006 ல் இந்தியா வருகை புரிந்திருந்தார். அதன் பிறகு 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியா வந்தார். இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு இந்திய சவுதி உறவானது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கு முன்பே கூட மன்னர் சவுத் 1955 ஆம் ஆண்டு இந்தியா வருகை புரிந்தார். 1956ல் ஜவஹர்லால் நேரு சவுதி அரேபியாவுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு 1982ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சவுதி அரேபியா வருகை புரிந்துள்ளார். எனவே தொடர்ச்சியாக இரு நாட்டு உறவுகளும் நல்லவிதமாகவே சென்று வருகிறது.

இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணையை அனுப்பும் நாடுகளில் சவுதி முதலிடத்தில் உள்ளது. மருத்துவ துறை, கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் துறைகளில் சவுதி அரசின் முதலீடுகள் இந்தியாவில் அதிகம் இந்த சந்திப்பினால் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.' என்றார்.

இந்த அமைப்புக் குழுவின் சவுதி தலைவரான அப்துல்லா அல் முப்தி தனது அறிக்கையில் ' இளவரசர் சல்மானின் இந்திய பயணமானது இரு நாட்டு உறவுகளில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். 2.8 மில்லியன் இந்தியர்கள் சவுதியில் பணி புரிகின்றனர். இந்தியாவின் நான்காவது மிகப் பெரும் தொழில் பார்ட்னராக சவுதி அரேபியா திகழ்கிறது. சவுதியின் 'சாபிக்' SABIC நிறுவனமானது இந்தியாவின் பெங்களூரில் 100 மில்லியன் செலவில் தொழில் நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. சைனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் அமைப்பாக இரண்டாவது இடத்தில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது." என்றார்.

ப.சிதம்பரம் மற்றொரு அமைச்சரான முக்ரின் பின் அப்துல் அஜீஸையும் சந்தித்தார். நமது அமைச்சரின் வருகையானது மேலும் பல புதிய காண்ட்ராக்டுகள் நமது நாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும் பல நாடுகளில் சவுதி முன்னணியில் உள்ளது என்றால் மிகை ஆகாது. இந்த நெருக்கமானது மேலும் தொடர நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி

அரப் நியூஸ்

No comments: